Home
About
Gallery
Events
Manifesto
Blog
Volunteer
Manifesto
Home
/
Manifesto
2021 சட்டசபைத் தேர்தலுக்கான
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை
கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்குத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்.
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது.
சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி-யில் ஒளிபரப்பு.
இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கீடு.
தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ. 24,000-ஆக உயர்வு.
மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்.
பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.
உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி.
பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
திமுக-வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு.
200 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டுப் பட்டா.
நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
சிறு, குறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்.
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சைபர் காவல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்.
மீனவர்கள், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
பொங்கல்விழா மாபெரும் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படும்.
பெண்கள் இட ஒதுக்கீடு 40%-ஆக அதிகரிக்கப்படும்.
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி பணி நியமனம்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்.
புதிய நீர்வள அமைச்சகம் உருவாக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை - 2021 (பதிவிறக்க)
விடியலை நோக்கி..!
திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள்.
இணைய