திமுக மகளிரணி செயலாளர் எம்.பி. திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு.மணிமாறன் அவர்களின் தலைமையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் மகளிரணியுடன் சேர்ந்து கேக் வெட்டி சிறப்பித்தபோது!!!
கழக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியம் வேடர்புளியங்குளம் கிராமத்தில் 11/12/2021 மற்றும்12/12/2021 அன்று நடைபெற இருக்கும் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு ரூ.25000/- நன்கொடையாக வழங்கப்பட்டது!
நமது மாநில இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது அண்ணன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணியின் சார்பாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது.
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 16வது மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் திரு.V.ஜெயராஜ் அவர்களுக்கு வாக்கு சேகரித்து இன்று திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்த மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சருமான ஆருயிர் அண்ணன் திரு P மூர்த்தி BA அவர்களும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அருமை அண்ணன் திரு. மணிமாறன் அவர்களும் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் திரு. கொ.தனபாண்டியன் BAஅவர்களும் இன்று திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வெற்றி வேட்பாளர் திரு. V.ஜெயராஜ் அவர்களை ஆதரித்து மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணிக்கு தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட காண்டை கிராமத்தில் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தேன்......
#முத்தமிழறிஞர் #தலைவர் #கலைஞர் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் சட்ட பேரவை முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.சேடப்பட்டி முத்தையா அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் #மு_மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் 5௦௦- க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும் மற்றும் மூத்த திமுக நிர்வாகிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் 20 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
எங்களின் உயிரில் கலந்த தமிழின தலைவருக்கு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!!! #முத்தமிழறிஞர் #தலைவர் #கலைஞர் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று, மதுரை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் சட்ட பேரவை முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.சேடப்பட்டி முத்தையா அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #மு_மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.
#மதுரை தெற்கு மாவட்டம் #அவனியாபுரம் கிழக்கு சிந்தாமணி 58வது வட்ட செயலாளர் #கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடியை ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #மு_மணிமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் #ஏர்போர்ட்_பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் #கிருத்திகா_தங்கபாண்டியன், மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #பிரபு_சந்திரன் மற்றும் பகுதி செயலாளர் #செந்தாமரைக்_கண்ணன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில், #திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர், தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் #திரு_மு_மணிமாறன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி.#கனிமொழி எம்.பி அவர்களை நமது மாவட்ட கவுன்சிலர் மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் நேரில் சென்று வரவேற்ற போது!
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் #திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர், தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் #திரு_மு_மணிமாறன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ஆதரித்து, 04/04/2021 அன்று அண்ணன் திரு.மு.மணிமாறன் அவர்களின் துணைவியார் திருமதி.#பாரதி_மணிமாறன் அவர்களுடன் நமது மாவட்ட கவுன்சிலர் மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் #மதுரை #பேரையூர் தொகுதி மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்குகள் சேகரித்த போது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் #திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர், தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் #திரு_மு_மணிமாறன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ஆதரித்து, #மதுரை, தே.கல்லுப்பட்டியில் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய முன்னாள் சபாநாயகர் திரு.சேடப்பட்டி முத்தையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது!
#கள்ளிக்குடி ஒன்றிய மகளிரணி, தே.#கல்லுப்பட்டி ஒன்றிய மகளிரணி, #உசிலம்பட்டி ஒன்றிய மகளிரணி, #மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, #திருமங்கலம் ஒன்றிய மகளிரணி, #செல்லம்பட்டி ஒன்றிய மகளிரணி, #அவனியாபுரம் மேற்கு பகுதி மகளிரணி, #ஏழுமலை பேரூர் மகளிரணி, #பேரையூர் பேரூர் மகளிரணி, தே.கல்லுப்பட்டி பேரூர் மகளிரணி, #சேடபட்டி ஒன்றிய மகளிரணி, #திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் வடக்குப் ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி மகளிரணி, #அவனியாபுரம் கிழக்குப் பகுதி மகளிரணி, திருமங்கலம் நகர மகளிரணி, #உசிலம்பட்டி நகர மகளிரணி சார்பாக நமது மாவட்ட கவுன்சிலர் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களை நேரில் சந்தித்து மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த போது!
கழக #தலைவர் மாண்புமிகு #தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க எல்லோரும் நம்முடன் என்கிற முன்னெடுப்பின் வாயிலாக இணையதளம் மூலம் புதிய #திமுக உறுப்பினர்களை சேர்க்கும் முகாமினை இன்று #மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.#மணிமாறன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் திருமதி. #கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் அலுவலகத்தில் தொடங்கி வைத்த போது.
கழக தலைவர் #தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் திரு.தனபாண்டியன் முன்னிலையில் #திருமங்கலம் தொகுதி #மேலக்கோட்டை ஊராட்சி மற்றும் பாண்டியன்நகர் கிராமத்தில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் முககவசங்களை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் M.மணிமாறன் அவர்கள் வழங்கினார்.உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் செல்வம் அணி அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கழக தலைவர் #தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆருயிர் அண்ணன் M.மணிமாறன் அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் திரு.தனபாண்டியன் முன்னிலையில் #திருமங்கலம் #தொகுதி #கிரியகவுண்டன்பட்டி மற்றும் #பெரியார் காலனி கிராமத்தில் பொதுமக்களுக்கு அரிசி காய்கறி மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது .
கழக தலைவர் #தளபதி முக_ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆருயிர் அண்ணன் M.மணிமாறன் அவர்கள் #மதுரை மாவட்டம் #திருமங்கலம் ஒன்றியத்தில் தமிழ் இன #தலைவர் #கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட முதல் சமத்துவபுரத்தில் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டியன் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் திரு. தனபாண்டியன் தலைமையில் அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.M.மணிமாறன் அவர்கள் மதுரை திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் திரு.ராமமூர்த்தி தலைமையில் அனைத்து பொதுமக்களுக்கும் அரிசி, காய்கறி, முககவசம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக 144 தடை உத்தரவில் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அருமை அண்ணன் மு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டலின் படி கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட டீ.அரசபட்டி, நேசநேரி, கரிசகாளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமப்புறங்களுக்கு கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் K.S.ராமமூர்த்தி அவர்கள் தலமையில் 22வது வார்டு மாவட்ட கவுன்சிலர் T.கிருத்திகா தங்கப்பாண்டி அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 1500 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது உடன் கள்ளிக்குடி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு.நாகேந்திரன் மற்றும் சோளம்பட்டி வெங்கடேசன் இளைஞரணி தோழர்கள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.....
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை திருமங்கலம் தொகுதி சாத்தங்குடி, புல்லமுத்துர், புலியுர், கண்டுகுலம், போல்னாயக்கன்பட்டி கிராமங்களில் 1700 பயனாளிகளுக்கு ஒன்றிய செயலாளர் திரு. தனபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டியன், மற்றும் கிளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கியபோது..
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தனக்கன்குளம் பகுதியில் உள்ள 50 கூலித் தொழிலாளர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் 1 மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை தெற்கு மாவட்ட செயலாளர் மதிற்பிற்குரிய அண்ணன் திரு.மணிமாறன் அவர்கள் வழங்கினார்.
வணக்கம் மேடம் எனது பெயர் வழக்கறிஞர் சிவப்பிரகாஷ் நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன்.நான் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி பிரிவு துணை அமைப்பாளராக பதவி வகிக்கிறேன் .எங்களது ஊர் கள்ளிக்குடி ஒன்றியம் டி வலையங்குளம் கிராமமாகும்.எங்களது ஊரில் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் இது சம்பந்தமாக நாங்களே கிணறு வெட்டி வருகிறோம் சுமார் 3 லட்சம் செலவில் இது சம்பந்தமாக நேற்றைய தினம் நேற்றைய நாளிதழிலும் சன் டிவி நியூஸ் சேனலிலும் செய்தி வந்துள்ளது ஆகவே இது சம்பந்தமாக எங்களுடைய கிராம பொதுமக்கள் உங்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதியும் நேரமும் ஒதுக்கி தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .நன்றி வணக்கம். திரு.சிவப்பிரகாஷ் அவர்களின் கோரிக்கையை ஏற்று நமது மதுரை மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களை நேரில் வரவழைத்து கலந்தாலோசித்து Rs.10,000/- நிதியுதவி வழங்கினார்!
டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களுக்கும் இலவசமாக கல்வி பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கும் மதுரை, திருப்பரங்குன்றம் "Agamudaiyar Educational Centre" பயிற்சி மையத்திற்கு நம் மதுரை தெற்கு மாவட்ட திமுக கவுன்சிலர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி அவர்களால் ஒரு முழு பயிற்சி (Batch) எடுப்பதற்குண்டான மொத்த தொகையான ரூ.60,000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.
கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு தொடர் விலை உயர்வை கண்டித்து மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 22.02.21 திருமங்கலம் நகர் ராஜாஜி சிலை அருகில் நடைபெற்றது.... இதில் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மு.மணிமாறன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் நகர கழக செயலாளர் அண்ணன் திரு.மு.சி.சோ.சி.முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதாஅதியமான், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், நகர நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைத்து வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
வருகின்ற 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. #மணிமாறன் அவர்களுக்கும், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.கிருத்திகா தங்கபாண்டி அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர் திரு. வேட்டையன் அவர்களுக்கும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் போட்டியிட விருப்பமனு அளித்தபோது.