கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி தலைமையில் ஒன்றிய செயலாளர் திரு.தனபாண்டியன் முன்னிலையில் திருமங்கலம் தொகுதி மேலக்கோட்டை ஊராட்சி மற்றும் பாண்டியன்நகர் கிராமத்து பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் முககவசங்களை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் M.மணிமாறன் அவர்கள் வழங்கினார்.உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், அணி அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை திருமங்கலம் தொகுதி வடகரை ஊராட்சி மற்றும் உச்சப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் முககவசங்களை மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் வழங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆருயிர் அண்ணன் M.மணிமாறன் அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் திரு.தனபாண்டியன் முன்னிலையில் திருமங்கலம் தொகுதி கிரியகவுண்டன்பட்டி மற்றும் பெரியார் காலனி கிராமத்தில் பொதுமக்களுக்கு அரிசி காய்கறி மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது .
திருமங்கலம் ஒன்றியத்தில் தமிழ் இன தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட முதல் சமத்துவபுரத்தில் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் திரு. தனபாண்டியன் தலைமையில் அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கழக தலைவர் தளபதி அவர்களின் ஒன்றிணைவோம்வா திட்டத்தில் உதவி கேட்கும் மக்களுக்கு மதுரை தெற்கு மாவட்ட கவுன்சிலர் திருமதி.கிருத்திகாதங்கபாண்டியன் அவர்கள் ஒருலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்.
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.M.மணிமாறன் அவர்கள் மதுரை திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் திரு.ராமமூர்த்தி தலைமையில் அனைத்து பொதுமக்களுக்கும் அரிசி, காய்கறி, முககவசம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.